உடற்பயிற்சி உடல் செயல்பாடுகளுக்கு ரொம்பவே நல்லது. எனவே, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்றுதான் நீரேற்றமாக இருப்பது.
கோடையில் உடற்பயிற்சி செய்வது சவாலானது. எனவே, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் சில குறிப்புகள் இங்கே.
உடற்பயிற்சி செய்யும் முன் 2-3 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இது திரவத்தை ஊறிஞ்சி, உடற்பயிற்சிக்கு உடலை தயார்ப்படுத்தும்.
உடற்பயிற்சி முன் விதைகள் அல்லது நட்ஸ்கள் சாப்பிடுங்கள். இவை இரத்த சர்க்கரை குறைவின் அபாயத்தை குறைக்க உதவும்.
தீவிரமான உடற்பயிற்சி செய்யும் போது அதிக வியர்வை வெளியேறும். எனவே, எலக்ட்ரோலைட் பானங்கள் குடியுங்கள். இது உடலை வலுவாக வைத்திருக்க உதவும்.
வெள்ளரிக்காய், தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள். இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
உடற்பயிற்சி செய்யும் முன் ஏதாவது சாப்பிடுதல், குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதுபோல உடற்பயிற்சிக்கு பிறகும் தண்ணீர் குடியுங்கள்.
தினமும் பிஸ்கெட் சாப்பிடுபவரா நீங்க? இந்த விஷயம் தெரியுமா?
ஏசி-யில் இருக்கும் போது தலைவலி வர காரணம் இதுதான்!
ஒரு நொடியில் ஜீரணக் கோளாறை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்!!
அனுஷ்கா சர்மாவின் பியூட்டி ரகசியம் இதுதான்!