புதிய கல்விக்கொள்கை எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மூன்று மொழிலகளில் இரண்டு இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 02 March 2025: இந்தியா- நியூசிலாந்த் போட்டி வெற்றி யாருக்கு.?
Tamil News Live today 02 March 2025: இந்தியா- நியூசிலாந்த் போட்டி வெற்றி யாருக்கு.?

இந்தியா- நியூசிலாந்த் இடையிலான சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் குரூப் சுற்றில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதற்கான போட்டியாக இன்றைய போட்டி அமையவுள்ளது.
புதிய கல்விக்கொள்கையில் 2 இந்திய மொழிகளைக் கற்கலாம்: பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்!
லைவ் வீடியோ பதிவுகள் 30 நாட்களில் டெலிட் ஆகிவிடும்: பேஸ்புக் அதிரடி அப்டேட்!
Facebook live video auto delete: பேஸ்புக்கில் லைவ் வீடியோக்கள் பதிவேற்றிய 30 நாட்களில் தானாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வீடியோக்களை கிளிப்புகள் அல்லது ரீல்களாகப் பகிரலாம், டவுன்லோட் செய்யலாம் அல்லது நீக்கலாம். இறந்தவர்களின் கணக்குகளில் உள்ள வீடியோக்கள் நீக்கப்படாது.
மேலும் படிக்கவருண் சுழழில் சுருண்ட நியூசிலாந்து! 44 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி!
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இன்று இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப் போகிறது.
மேலும் படிக்கதிமுக ஆட்சியில் போதை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்கஇரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தமிழகத்தின் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உட்பட ஏழு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்கதிராவிட மாடல் ஆட்சியில் 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை தங்கச்சாலையில் ராமர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திய பின் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் படிக்ககணவரை விட்டு பிரிந்து இருக்க என்ன காரணம்? விவாகரத்து சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மஞ்சு லட்சுமி!
விவாகரத்து பெற போவதாக வெளியாகி வரும் செய்தி குறித்து நடிகையும், மோகன் பாபுவின் மகளுமான மஞ்சு லட்சுமி விளக்கம் கொடுத்துள்ளார்.
இது அதிமுகவின் கோட்டை! இங்கே யார் வந்தாலும் எந்த பருப்பு வேகாது! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட செல்லூர் ராஜு, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும் படிக்கநிலவில் தரையிறங்கிய அமெரிக்கத் தனியார் நிறுவனம்!
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நிலவில் தரையிறங்கி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த நிறுவனம் நாசாவிற்காக நிலவில் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.
2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா; குஷி மோடில் ஃபேன்ஸ்!
நீண்ட நாட்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா இப்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.
Thandel Movie OTT : தண்டேல் OTT ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு! எங்கே, எப்போது பார்ப்பது?
Thandel OTT : நாக சைதன்யா, சாய் பல்லவியின் 'தண்டேல்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
கூகுள் ஊழியர்களுக்கு வேட்டு! AI முதலீட்டுக்காக மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை!
கூகுள் அதன் மக்கள் செயல்பாடுகள் மற்றும் கிளவுட் துறைகளில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. கூகுள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பதுதான் ஆட்குறைப்புக்குக் காரணம் என்றும் சிஎன்பிசி அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்கஓபிஎஸ் அணியில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர்! கடுப்பான இபிஎஸ் அதிரடி!
திண்டுக்கல் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஓபிஎஸ் அணியில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி அவரை அதிரடியாக நீக்கியுள்ளார்.
மேலும் படிக்க48 டன் தங்கம் உற்பத்தி! சொந்தமாக விமான நிலையம்! உலகின் பணக்கார தங்கச் சுரங்கம் இதுதான்!
உலகின் பணக்கார தங்கச் சுரங்கத்தில் 48 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சுரங்கம் எங்கு அமைந்துள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்கIndraja Shankar: கணவர் குழந்தையோடு சென்று பட்டம் வாங்கிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தை, கணவர், அம்மா, மாமியார் என அனைவருடனும் சென்று எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே மகளுக்கு பாலியல் தொல்லை; ஒருவர் கைது, 6 பேர் மாயம்
மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகள் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் ஒரு திருவிழாவின்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இது தொர்பாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆறு பேர் தலைமறைவாக உள்ளனர். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதி அளித்துள்ளார்.
மேலும் படிக்கமாயாஜாலம் காட்டும் சென்னை ஐஐடி! 3 மணி நேரத்தில் 1600 கிமீ போகலாம் - வியந்துபோன ஆனந்த் மஹிந்திரா
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு 1,668 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 3 மணி நேரத்தில் 600 ரூபாய்க்கு முடிக்கக்கூடிய எலக்ட்ரிக் சீ க்ளைடரை வாட்டர்ஃப்ளை டெக்னாலஜிஸ் உருவாக்கியிருக்கு. ஐஐடி மெட்ராஸின் ஆதரவுடன் இந்த ஸ்டார்ட்அப்பை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியிருக்காரு.
மேலும் படிக்கதமிழகத்தில் மீண்டும் மழை எச்சரிக்கையா? வானிலை மையம் சொல்வது என்ன? இதோ நியூ அப்டேட்!
தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் படிக்க'அயன்' படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ இவரா? மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணிய நடிகர்!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'அயன்' இந்த படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
திருமணமான 25 நாளில் கணவருக்கு விஷம் வைத்த மனைவி!
கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் படிக்க