சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இன்று இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப் போகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இல், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஏ பிரில் முதல் இடத்தைப் உறுதி செய்து அரையிறுதிக்கு முன்னேறுகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. 250 ரன்களைத் துரத்திய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்குள் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி மார்ச் 4ஆம் தேதி நடக்கும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் தொடங்கியது. பிறகு இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் அணியை சரிவிலிருந்து மீட்டு நியூசிலாந்து அணிக்கு சவாலான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தனர். இந்திய அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். 98 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்தின் பந்துவீச்சில் மேட் ஹென்றி ஒரு அற்புதமான திறனை வெளிப்படுத்தினார். 8 ஓவர்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேசமயம், கைல் ஜேமீசன், வில் ஓ'ரூர்க், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில், சுழற்பந்து வீச்சு அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை. சுழலில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மைக்கேல் பிரேஸ்வெல் 9 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
இந்நிலையில், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அந்த அணிக்காக அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 81 ரன்கள் சேர்த்தார். அவரைத் தவிர, மிட்செல் சாண்ட்னர் 28, வில் யங் 22, டேரில் மிட்செல் 17, டாம் லாதம் 14, கிளென் பிலிப்ஸ் 12, ரச்சின் ரவீந்திர 6, மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
