Indraja Shankar: கணவர் குழந்தையோடு சென்று பட்டம் வாங்கிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தை, கணவர், அம்மா, மாமியார் என அனைவருடனும் சென்று எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் தன்னுடைய விடா முயற்சியில் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, வெள்ளித்திரையிலும் வாய்ப்பை கை கைப்பற்றியவர் தான் ரோபோ ஷங்கர்.
ரோபோ ஷங்கர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்
அஜித், விஜய், தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர்... அம்பி படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த வாரம் மார்ச் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு; தாத்தா ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரோபோ ஷங்கர்!
ப்ரியங்காவுக்கும் நடித்து வருகிறார்
ரோபோ ஷங்கர் மட்டும் இன்றி, அவருடைய மனைவி ப்ரியங்கா மற்றும் மகள் ஆகியோரும் நடிகர்கள் தான். ப்ரியங்கா யூடியூப் வீடியோக்களில் நடித்து வருகிறார். அதே போல் சில விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்.
இந்திரஜாவும் பிகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்
அப்பா - அம்மாவை தொடர்ந்து, இந்திரஜாவும் பிகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அட்லீ இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இன்ட்ராஜா ஃபூட் பால் அணியில் இடம்பெற்ற (பாண்டியம்மா) என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் தளபதி இவரை, குண்டம்மா என அழைத்த காட்சிகள் வேற லெவலில் இருந்தது.
'விருமன்' படத்தில் இந்திரஜா ஷங்கர்
இந்த அப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் நடித்திருந்த இந்திரஜா ஷங்கர்... சமீபத்தில் எஸ்.ஏ.சி நடிப்பில் வெளியான 'கூரன்' படத்திலும் நடித்திருந்தார்.
அம்மா ஆகப்போகும் இந்திரஜா; வளைகாப்புக்கு முன் மகளுக்கு ரோபோ சங்கர் வாரி வழங்கிய சீர் இவ்வளவா?
கூரன் பட நிகழ்ச்சியில் பேசிய இந்திரஜா
இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தளபதி விஜய் மற்றும் அவரின் தந்தை என இரு லெஜெண்ட்ஸ்-சுடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம் என எமோஷ்னலாக பேசி இருந்தார்.
கல்லூரியை முடித்த கையேடு நடந்த திருமணம்
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த கையேடு, தன்னுடைய குடும்ப நண்பர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட, இந்திரஜா தற்போது தாயான பின்னர் எதிராஜ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, படித்து வாங்கிய பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
60 இருந்து 120.. இந்திரஜா மீது இவ்வளவு காதலா? யாரும் செய்யாததை செய்த ரோபோ மருமகன் கார்த்திக்!
கணவர் - குழந்தையோடு சென்று பட்டம் பெற்ற இந்திரஜா
இதுகுறித்த புகைப்படங்களை தற்போது இவர் வெளியிட, அவை வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் தொடருந்து இந்திரஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பட்டம் பெறுவது தன்னுடைய கனவு என்றும் பெற்றோர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை என இந்திரஜா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.