MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 60 இருந்து 120.. இந்திரஜா மீது இவ்வளவு காதலா? யாரும் செய்யாததை செய்த ரோபோ மருமகன் கார்த்திக்!

60 இருந்து 120.. இந்திரஜா மீது இவ்வளவு காதலா? யாரும் செய்யாததை செய்த ரோபோ மருமகன் கார்த்திக்!

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த மார்ச் மாதம், அவரின் மாமா கார்த்தியுடன் திருமணமான நிலையில், கார்த்தி தன் மனைவிக்காக செய்த செயல் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Aug 20 2024, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Robo Shankar daughter Indraja

Robo Shankar daughter Indraja

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்து வரும் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர், தனக்கு மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரை காதலித்து, கடந்த மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

26
Indraja Wedding

Indraja Wedding

இவர்களுடைய திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. தன்னுடைய ஒரே மகளின் திருமணத்தை, தன்னுடைய சக்திக்கு மீறிய பணத்தை செலவழித்து பிரம்மாண்டமாக நடத்தினார் ரோபோ சங்கர்.
'விடாமுயற்சி' படக்குழுவினருடன் கிளாஸாக ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் அஜித்! ரீசென்ட் போட்டோஸ்!

36
Indraja and Karthik Wedding

Indraja and Karthik Wedding

இந்திரஜாவுக்கு சுமார் 100 சவரன் நகை போட்டதாகவும், மருமகன் ஆசைப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்ததாக கூறப்பட்டது. அதேபோல் ஆசை ஆசையாக கட்டி வந்த வீட்டையும் தன்னுடைய மகள் இந்திரஜா பேரில் ரோபோ சங்கர் எழுதி வைத்ததாக தகவல்கள் வெளியாக்கின. இந்திரஜாவுக்கும் - கார்த்திக்கும் சுமார் எட்டு வயதுக்கு மேல் வித்தியாசம் என்பதால், இருவருமே குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடாமல், கூடிய விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.

46
Indraja RoboShankar in Vijay tv show

Indraja RoboShankar in Vijay tv show

இந்நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும்.... மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த இந்திரஜா, இதன் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதையும் உறுதி செய்தார்.

மறைந்த நடிகர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தராம்பா காலமானார்!

56
Indraja shankar Announce Pregnancy

Indraja shankar Announce Pregnancy

இந்திராஜாவின் கணவர் தொழிலதிபர் என்பதை தாண்டி, சுமார் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தன்னுடைய அம்மா பெயரில் ட்ரெஸ்ட் ஒன்றை உருவாக்கி வளர்த்து வருகிறார். அதே போல் ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்பது இவரின் கனவு என்பதால்... அதற்கான முயற்சிகளும் ஈடுபட்டுள்ளார்.  கூடிய விரைவில் இவர் இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

66
Karthick Boost weight for Indraja

Karthick Boost weight for Indraja

தற்போது தன்னுடைய காதல் மனைவிக்காக, ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் செய்த செயல் வெளியாகி பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய மனைவி, தன்னைவிட குண்டாக இருக்கிறார் என யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக, 60 கிலோவில் இருந்து 120 கிலோவாக தன்னுடைய உடல் எடையை கூட்டியதாக தெரிவித்துள்ளார். ஒரு சிலர் தங்களின் இடையை குறைத்து கேள்வி பட்டிருப்போம் ஆனால் காதலுக்காக உடல் எடையை கார்த்தி கூட்டியதை... பலரும் ஆச்சர்யத்துடன் பார்ப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான 'தங்கலான்' 100 கோடியை எட்ட முடியாமல் தவிக்கிறாரா விக்ரம்?
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved