மறைந்த நடிகர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தராம்பா காலமானார்!
நடிகர், அரசியல் பிரமுகர், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர், திரைகதை எழுத்தாளர், என பன்முக திறமையாளராக விளங்கிய மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தராம்பா ராமசாமி வயது மூப்பு காரணமாக தன்னுடைய 84 வயதில் இன்று காலை காலமானார்.
Cho Ramaswamy
1960 மற்றும் 1970-களில் எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக அறியப்பட்டவர் சோ ராமசாமி. மேலும் அரசியல் ஆலோசகர், அரசியல் நையாண்டி, நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், வழக்கறிஞர், என பல்வேறு பரிமாணங்களுடன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்டவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீனிவாச ஐயர் ராமசுவாமி என்று இருந்த நிலையில், பின்னர் சோ ராமசாமி என தன்னுடைய பெயரை சுருக்கிக்கொண்டார்.
Cho Ramaswamy Wife Soundaramba
இவர் 1966 ஆம் ஆண்டு சௌந்தராம்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஸ்ரீராம் ராமசாமி மற்றும் சிந்துஜா ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தன்னுடைய தந்தை பன்முக திறமையாளராக இருந்தாலும், ஏனோ சோவின் மகளோ... மகனோ... சினிமாவிலும், அரசியலிலும் தங்களை ஈடுபத்திக்கொள்ள விரும்பவில்லை.
பல தியேட்டர்களில் வாஷ் அவுட்டான 'தங்கலான்' 100 கோடியை எட்ட முடியாமல் தவிக்கிறாரா விக்ரம்?
Thuglak Founder Cho Ramaswamy
சோ ராமசாமி துவங்கிய 'துக்ளக்' இதழ் தற்போது வரை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. மேலும் தற்போதைய அரசியல் பற்றி அவர் ஏற்கனவே கணித்த சில விஷயங்கள் நிஜத்தில் பலித்துள்ளன. குறிப்பாக நரேந்திர மோடி எதிர்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய இடத்தை அடைவார் என அவர் கணித்தார். அதே போல் மோடி பிரதமராக நாட்டு மக்களால் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுப்பார் என கூறினார். அதே போல் சுமார் ஐந்து முறை ஜெயலலிதா ஒரு முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Raja Saba MP
எப்படிப்பட்ட விமர்சனங்கள் தன் மீது வாரி இறைக்கப்பட்டாலும் அவற்றிக்கு அரசியல் நாகரீகத்துடன் பதிலடி கொடுத்தவர் சோ. ஜெயலலிதாவுக்கு பல சமயங்களில் அரசியல் ஆலோசகராகவும் சோ இருந்துள்ளார். இவர் இந்திய குடியரசு தலைவர் ஆர் கே நாராயணன் அவர்களால் ராஜசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 1999 முதல் 205 வரை ராஜசபா எம்பியாக பணியாற்றினார் .சென்னையில் சங்குபரிவாரின் ஆலோசனை ஆளுமையாகவும் இருந்தார்.
ஷாலினி முதல்... லட்சுமி மேனன் வரை சொந்த குரலில் பாடிய ஹீரோயின்களின் ஹிட் பாடல்கள்!
Cho Ramaswamy Wife Passed Away
இவர் தன்னுடைய ஒவ்வொரு பணியையும் திறம்பட செய்திட இவருக்கு என்றும் முதுகெலும்பாக இருந்தவர் இவருடைய மனைவி சௌந்தராம்பா தான். 84 வயதாகும் இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சௌந்தராம்பா காலமான தகவலை அவருடைய குடும்பத்தினர் இன்று காலை அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சௌந்தராம்பா ராமசாமியின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் பலர் தங்களின் இறங்ககளை தெரிவித்து வருகிறார்கள்.