Asianet News TamilAsianet News Tamil

பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்த நமக்கு காலரை தூக்கிவிட்டு வாக்கு கேட்கும் தகுதி உள்ளது - எஸ்.பி.வேலுமணி

அதிமுக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செய்துள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் நாம் மக்களிடம் காலரை தூக்கிவிட்டு வாக்கு சேகரிக்க செல்லலாம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

SP Velumani has said that there is no need to respond to BJP's comments vel
Author
First Published Feb 27, 2024, 4:45 PM IST

கோவை சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராமன் மற்றும் சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக  இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகின்றன. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஆனால் அந்த தகவலை பார்த்து அண்ணன் அம்மன் அர்ஜூணன் கோவப்பட்டார், என்றும் அதை பற்றியெல்லாம் பேசினால் நமக்கு நேரம் வேஸ்ட் என்றும் குறிப்பிட்டார். 

வருமான வரித்துறை மூலம் தொழில் அதிபர்களிடம் கல்லா கட்டும் பாஜக - ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுக என்பது தாய் வீடு, அனைவரும் தாய் வீட்டிற்கு தான் வருவார்கள். யாரும் வெளியே போகமாட்டார்கள். அதிமுக உலகிலேயே 7வது பெரிய கட்சி. சாதாரன குடும்பத்தில் பிறந்த  நம்மை எம்.எல்.ஏ வாக, அமைச்சராக மாற்றி அழகு பார்த்தவர் அம்மா. வெரும் 3, 4 சதவீதம் வாக்காளர்கள் உள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால் நாம் பதில் கூற வேண்டுமா? 

அதிமுக தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி. இதற்கெல்லாம் பதில் கூற வேண்டாம். அம்மன் அர்ஜூணன் அவர்களே, டோன் கேர் ( don’t care ) என விட்டுச் செல்லுங்கள். கவலை படாதீர்கள். நம்மை பற்றி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். இப்போது  கோவையில் உள்ள அம்மன் கே.அர்ஜூணன், ஜெயராம், கந்தசாமி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இரண்டு முறை எம்.எல்.ஏ வாக ஆக்கியுள்ள இந்த கட்சியை விட்டு வெரும் 3, 4 சதவீத வாக்கு கொண்ட கட்சியான பாஜகவிற்கு போவார்களா?  

“இறுதிக்கட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை” வெற்றி இலக்கல்ல 400 தான் இலக்கு - அண்ணாமலை

பல்வேறு வளர்ச்சி பணிகளை  செய்துள்ள நமக்கு காலரை தூக்கி சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்கும் தகுதி உள்ளது. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. எடப்பாடியாருக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவது தான் லட்சியம் என்றும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios