“இறுதிக்கட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை” வெற்றி இலக்கல்ல 400 தான் இலக்கு - அண்ணாமலை
என் மண் என் மக்கள் யாத்திரை பயணம் இறுதி கட்டத்தை நெறுங்கி உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது இலக்கல்ல 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது தான் இலக்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் தமிழகம் முழுவதும் மொத்தமாக 234 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது தொகுதி வாரியாக அண்ணாமலைக்கு பாஜக, தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தற்போது இந்த பயணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 233 வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடை பயணத்தை தொடகினார். 234 வது தொகுதியான திருப்பூர் தெற்கில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து இந்த நடை பயணத்தை நிறைவு செய்கிறார். நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் புத்துணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
கோவையில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் ஏறி சாகவாசமாக பணத்தை திருடும் கொள்ளையன்
அதன்படி திருப்பூரில் இறுதிக்கட்ட யாத்திரையை மேற்கொண்டுள்ள அண்ணாமலை, தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், திருப்பூர் என்றால் பீனிக்ஸ் பறவை போல் உழைத்து முன்னேற கூடிய மக்கள் இருக்கும் இடம். தமிழ்க் அரசை புரட்டி போட கூடிய வகையில் இந்த யாத்திரை இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. எனவே வெற்றி என்பது நமது இலக்கல்ல, 400 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது தான் இலக்கு.