வருமான வரித்துறை மூலம் தொழில் அதிபர்களிடம் கல்லா கட்டும் பாஜக - ஆனந்த் சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

வருமான வரித்துறையின் தரவுகளை பயன்படுத்தி பாஜக தொழில் அதிபர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்துள்ளது. இது தொடர்பான ஆதாரம் விரைவில் வெளிவரும் என ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

bjp collect donations from business men based on income tax department reports said anand srinivasan in chennai vel

துபாயில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டது எனக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது. 

திமுக தலைமையில் இருக்கும் எங்களது கூட்டணி 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்தியாவைச் சார்ந்த ஊடகங்கள் பல ஊழல்களை மறைக்கின்றன. இப்பொழுது புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. வருமானவரித்துறை ஆய்வுகளை வைத்து பல  தொழிலதிபர்கள் இடமிருந்து கோடி கணக்கில் நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. மிக விரைவில் அதற்கான பட்டியல் வெளிவரும்.

“இறுதிக்கட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை” வெற்றி இலக்கல்ல 400 தான் இலக்கு - அண்ணாமலை

ஊழலை நடைபெறவே இல்லை என கூறிய பாஜக எவ்வளவு வாங்கியுள்ளது என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம். அந்த வகையில் மோடியையும் நாங்கள் வரவேற்கிறோம். திருப்பூரில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற இருக்கிறது. திருப்பூரில் நீண்ட நாட்களாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரையில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை போல் காலதாமதம் செய்யாமல்  கட்டுவார்களா என எதிர்பார்ப்போம். திருப்பூரில் பாஜகவிற்கு ஆதரவு இருக்கிறது என்ற பெயரில் இதை செய்கிறார்கள். கோடிக்கணக்கில் குதிரை பேரம் செய்து ஆட்சி செய்கிறது. மக்களுக்கும், தொழில் துறைக்கும் ஏதாவது நல்லது செய்தால் நன்றாக இருக்கும். காங்கிரசுக்கும், திமுகவிற்குமான கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. திமுகவின் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி இருக்கும்.

பொன்முடி தொகுதி காலியானதாக அறிவிக்க தயக்கம் ஏன்.? தேர்தலை சந்திக்க பயமா.? ஸ்டாலினுக்கு சவால் விடும் பாஜக

2004இல் 40க்கு 40 வெற்றி பெற்றது போல் இந்த முறையும் திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே அமையும். திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்க உள்ளேன். பாஜகவின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அதனால் காங்கிரஸில் மட்டும் வாரிசுகள் இருக்கிறது என்று கூற முடியாது. தமிழகம் மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்சினை உள்ளது. இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள். இதனால் பிரதமர் வரும்போது கண்டிப்பாக கருப்புக்கொடி காட்டுவோம் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios