முதல்வர் ஸ்டாலின் குறுகிய காலத்தில் பல சாதனைகள் படைத்துள்ளதாகவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி பெரியாருக்கு அஞ்சலி என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
ரயில்களுக்கு இந்தியில் பெயர்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மோடி அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதோடு எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் ஆளும் முதல்வர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்து வருவதாக கூறியவர் அதனை பட்டியலிட்டார்.
கலைஞர் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் சார்பில் தமிழ்நாட்டில் விடப்பட்ட ரயில்களுக்கு நதிகளின் பெயரை வைத்ததாக தெரிவித்தவர், தற்போது தமிழ்நாட்டிற்கு எந்த வித புதிய ரயிலையும் விடாமல் வஞ்சித்து வருவதாகவும் அப்படி ஒரு சில ரயில்களை விட்டிருந்தாலும் கூட அதற்கு ஹிந்தி மொழியிலேயே பெயர் சூட்டி தமிழக மக்களை வேதனைப்படுத்துவதாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! திமுக தொடர்ந்து முன்னிலை! நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன?

தமிழக அரசின் அசத்தும் திட்டங்கள்
குஜராத்தில் மோடி 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து செய்யாத அனைத்தையும் திமுக தலைவர் ஸ்டாலின் 4 ஆண்டுகளிலேயே பல்வேறு சாதனைகளை மக்கள் மனதில் உள்ளவாறு செய்துள்ளது குறித்தும் பட்டியலிட்டு பேசினார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காமல் இருந்தாலும் கூட தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் மாதம் மகளிருக்கு ஆயிரம் புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறித்தும் பட்டியலிட்டார்.
பெரியாரை தொட்டவன் கெட்டான்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்பது நாளை முதல் எல்லா திமுக தொண்டரும் தந்தை பெரியாருக்கு விழா எடுக்கக்கூடிய நாளாக இருக்கும் என கூறினார். பெரியார் வாழ்ந்த இந்த மண்ணை எவராலும் எந்த சக்தியாலும் தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்வர், பெரியாரை ஒரு சிலர் இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வருவதால் ஈரோட்டில் டெபாசிட் இழந்துள்ளதாகவும் கூறினார். எனவே பெரியாரைத் தொட்டவன் கெட்டான் என சீமானை விமர்சித்தார்.
டெல்லி தேர்தலில் பிரதமர் மோடி அலை; பாஜக வெற்றி பெற்றதற்கான '5' முக்கிய காரணங்கள்!

நாம் தமிழர் கட்சி என்ற பெயரை வைத்துக் கொண்டு சீமான் மோசடி செய்து வருவதாகவும் இன்றைய இளைய தலைமுறைக்கு பழைய வரலாறுகளை சொல்லாததால் தான் சீமானை போன்றவர்கள் இளைஞர் சமுதாயத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்றார். திமுக காரன் கீழே இறங்கினால் சீமானை ஓட ஓட விரட்டும் சக்தி உள்ளதாகவும் கூறினார்.
