Asianet News TamilAsianet News Tamil

உல்லாச வீடியோ எடுத்த காதல் கணவன்... முதலிரவுக்கு பயந்து தப்பி ஓடிய மணமகன்...கல்யாண வீட்டில் 2 சிறுமிகள் பலாத்காரம்...

Romantic video taken by the romantic harem ... fearing for the first time the bridegroom ... the wedding house 2 girls raped ...
Romantic video taken by the romantic harem ... fearing for the first time the bridegroom ... the wedding house 2 girls raped ...
Author
First Published Feb 6, 2018, 11:44 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


மனைவியை ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமையாக விற்க முயன்ற காதல் கணவன்...

கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் சூப்பிரண்டிடம் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் தற்போது குஜராத் மாநிலத்தில் வசிப்பதாகவும், தன்னை முகமது ரியாஸ் என்பவர் கற்பழித்து, அந்த காட்சிகளை பதிவு செய்ததாகவும், தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றி, போலி ஆவணங்கள் தயாரித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார். முகமது ரியாசும், அவரது கூட்டாளிகளும் தன்னை சிரியாவுக்கு (IS இயக்கத்தில் சேர்ப்பதற்காக) அனுப்புவதற்காக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார்.

Romantic video taken by the romantic harem ... fearing for the first time the bridegroom ... the wedding house 2 girls raped ...

இந்த புகாரில் கேரள போலீசார் ஏற்கனவே அந்த பெண்ணின் மாமியார் உள்பட சில குற்றவாளிகளை கைது செய்தனர். ஜனவரி 24-ந் தேதி இந்த வழக்கை மத்திய உள்துறை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றியது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் முக்கிய குற்றவாளியான ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புவைத்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் முகமது ரியாசை கண்காணித்து வந்தனர்.

கடந்த 2-ந் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய முகமது ரியாசை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு பென்டிரைவ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை கொச்சி என்.ஐ.ஏ. கிளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் அவரை கைது செய்து எர்ணாகுளம் என்.ஐ.ஏ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல்கள் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முதலிரவுக்கு பயந்து ஓட்டம்பிடித்த மணமகன்... ஏமாற்றமடைந்த மணப்பெண்!

நெல்லை மாவட்டம் செட்டிமேடு என்ற ஊரில் சென்டரிங் வேலை செய்து வரும் ஜோசப்புக்கும், தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

Romantic video taken by the romantic harem ... fearing for the first time the bridegroom ... the wedding house 2 girls raped ...

திருமணம் முடிந்து முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலிரவு அறைக்கு மாப்பிளையை அனுப்ப அவரை தேடியபோது ஜோசப் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் தெரிந்தது அவர் மாயமான விஷயம். அவர் தனது காதலியுடன் ஓடி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பெண் வீட்டார், இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மணமகனை தேடி வருகின்றனர். முதலிரவு நாளில் இப்படி மணமகன் ஓடிப்போன சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருமண வீட்டிற்கு சென்ற இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டிற்கு சென்ற இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். மாலாகர்க் திருமண விழாவில் கலந்துக்கொண்ட சிறுமிகளை அடையாளம் தெரியாத நபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கூறி உள்ளது.

Romantic video taken by the romantic harem ... fearing for the first time the bridegroom ... the wedding house 2 girls raped ...

இருப்பினும் மருத்துவ சோதனையில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எந்தஒரு முகாந்திரமும் இல்லை எனவும் போலீஸ் கூறி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

 

சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த தொழிலாளி மர்ம மரணம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடியூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிவா. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 9 வயது மகள் கோடியூரில் அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழி பீமன், குடிபோதையில் வந்து சிறுமியிடம்  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் இதுகுறித்து பாட்டி சின்னபொண்ணுவிடம் கூறினார்.

Romantic video taken by the romantic harem ... fearing for the first time the bridegroom ... the wedding house 2 girls raped ...

அவர் பீமனை சத்தம் போட்டார். பின்னர் இதுகுறித்து பெங்களூருவில் உள்ள தனது மகள் சிவா, மருமகன் சக்திவேல் ஆகியோரிடம் கூறினார். இவர்கள்2 பேரும் நேற்றிரவு பெங்களூருவில் இருந்து கோடியூர் வந்தனர். பின்னர் பீமனை நேரில் சந்தித்து அவரைத் தட்டிக்கேட்டனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அவர்களிடம் இருந்து பீமன் தப்பி ஓடினார். அவரைத் துரத்தி சென்றனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை பீமன் அங்குள்ள விளையாட்டு மைதானம் அருகே பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பென்னாகரம் போலீசார் விரைந்து சென்று பீமன் பிணத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பீமனை அடித்து கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

 

சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக காவலர்....

சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக ராமேஸ்வரம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சரவணன் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios