சென்னையில் 10 கோடி ரூபாய் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.! அதிரடியாக தட்டித் தூக்கிய அறநிலையத்துறை

தமிழகத்தில் அறநிலையத்துறை கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகிறது. சென்னை வில்லிவாக்கத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இது அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமானது.

Recovery of temple land worth Rs 10 crore in Chennai from encroachment KAK

தமிழகத்தில் அறநிலையத்துறை செயல்பாடுகள்

தமிழகத்தில் அறநிலையத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இலவசமாக ஆன்மிக சுற்றுலா, கோயில்களில் குடமுழுக்கு, அன்னதான திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கோயில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிமிப்பில் உள்ள இடங்களை மீட்க அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டணது. இதனையடுத்து  7132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

பாஜகவை ஆச்சரியப்படுத்திய திமுக அரசு.! இத்தனை ஆயிரம் கோடி கோயில் நிலங்கள் மீட்பா.? வெளியான பட்டியல்

ஆக்கிரமிப்பில் கோயில் நிலம்

இந்த நிலையில் சென்னையில்  வில்லவாக்கம் பகுதியில் உள்ள நிலங்களை தனியார் நிறுவனம் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்து கொண்டு அதற்கான வாடகையையும் தராமல் இருந்ததுள்ளது. இதனையடுத்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (04.02.2025) சென்னை, வில்லிவாக்கம். அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முழு மலையும் முருகனுக்கு சொந்தம்.! H .ராஜா அதிரடி

ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

சென்னை, வில்லிவாக்கம். அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக M.T.H. சாலை, சிவசக்தி காலனியில் உள்ள 17,625 சதுரடி பரப்பளவு கொண்ட வணிகமனையானது சக்தி எலக்ட்ரோ பிளேட்டிங் என்று நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிறுவனம் நீண்ட நாட்களாக வாடகைத் தொகை நிலுவையில் வைத்திருந்ததால், சென்னை மண்டலம் -2 இணை ஆணையர்கே.ரேணுகாதேவி நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  சென்னை உதவி ஆணையர் கி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios