தமிழகத்தில் தாறுமாறாக அதிகரிக்கும் கொரோனா..இன்றைய பாதிப்பு நிலவரம் !
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக தற்போது தேசிய அளவில் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 1,00,000-ஐ கடந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 80 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,059 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 393 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 13,319 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?