Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. ? ஊரடங்கு போட வாய்ப்பு ..? சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்..

தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 
 

Prevent the spread of corona by Collectors - Health secretary Radhakrishnan
Author
Tamilnádu, First Published May 27, 2022, 1:23 PM IST

தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில்,” தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை,அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

பொதுஇடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். லேசான அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மதுரை - தேனி ரயில் சேவை தொடக்கம்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுமுதல் ரயில் சேவை..

Follow Us:
Download App:
  • android
  • ios