24 மணி நேரத்தில் புயல் உருவாகக்கூடும் என்பதால் மீனவர்கள் மூன்று தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். 
இதுகுறித்து பேட்டியளித்த பாலச்சந்திரன், ‘

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து சென்னைக்கு தென் கிழக்கே 600 கிமி தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 11 கிமி வேகத்தில் அது நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறி டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் ஆந்திரா கடல் பகுதியில் ஓங்கூர் - காக்கிநாடாவில் கரை கடக்கும்.

 இதன் காரணமாக வட தமிழகத்தில் பரவலான மழை பெய்ய கூடும். புயல் கரையை கடக்கும் போது தமிழக கடலோர பகுதியில்  45-55 கிமி வேகத்தில் தரை காற்று வீச கூடும். இதனால், சென்னையில் இன்று லேசான மழையும், நாளை மிதமான மழை பெய்யும் பெய்ய உள்ளது. அடுத்த இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

’’தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு, திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். நாளை மறுநாள் (17-ந்தேதி) மாலை ஆந்திராவின் கடலோர பகுதியான ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால், சென்னை மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று பரவலாகவும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும். நாளை பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையமும் தெரிவித்துள்ளது. 

புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியது என்றாலும் நாளை தீவிர புயலாக மாறுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா போன்று ‘பேத்தாய்’ புயலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதுபோல் பேத்தாய் புயலும் ஆந்திராவில் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ன்று மாலை வடதமிழகம், புதுவை கடலோர ஆந்திராவில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். 16-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். நாளை வட தமிழகத்தில் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், 17-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் பேத்தாய் புயலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இன்று மாலை வடதமிழகம், புதுவை கடலோர ஆந்திராவில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். 16-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். நாளை வட தமிழகத்தில் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், 17-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் பேத்தாய் புயலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.