கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீசிய கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்மா மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்தது. அப்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.

ஆனால் அதற்கே டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. இந்நிலையில்தான் தாய்லாந்து கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், அது கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து தமிழ கடற்கரையை வந்தடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் ரெட் அலர்ட்டுக்கு முந்தைய யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

இதனால் தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், வடதமிழகத்தில் மிதமான மழை இருக்கும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தமிழகத்தில் உள் மாவட்டங்களை விடவும் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்