சென்னையில் இன்னும் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் ஒரு சில இடங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர். சென்னையில் அடுத்த 24  மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... "தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

அதே போல், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என கூறியுள்ளது.

இதனால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும். இதனால் தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.