புதுச்சேரியில் மறைமலையடிகள் சாலையில் மத்திய அரசு நிறுவனமான பாஸ்போர்ட் சேவை மையம் உள்ளது. இந்த மையத்தில் தினம்தோறும் காலை மற்றும் மாலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்குவது வழக்கம்.

நேற்று இங்கு தலைகீழாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு பறந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தேசியக்கொடி தலைகீழாக பறக்கும் தகவல் பாஸ்போர்ட் சேவை மைய ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  உடனே அவர்கள் தேசியக்கொடியை சரியாக பறக்கச் செய்தனர். இதற்க்கு இடையே சிலர் அதை தங்களுடைய செல்போன் கேமராவில் படம் பிடித்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.