மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த சில தினங்களாக சளி மற்றும் இருமல் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான வைகோ கடந்த சில தினங்களா சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் இன்று செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்பதாக இருந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள் வைகோ அடுத்த ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்.