Asianet News TamilAsianet News Tamil

Chennai Rains : சென்னையில் ‘திடீர்’ மழை… சென்னைவாசிகளே உஷார்..!

சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

It suddenly rained in various places in Chennai this morning
Author
Chennai, First Published Jan 17, 2022, 8:05 AM IST

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும்.  மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.  

It suddenly rained in various places in Chennai this morning

சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 2 மணிநேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

It suddenly rained in various places in Chennai this morning

இன்று அதிகாலை முதல் சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios