Asianet News TamilAsianet News Tamil

Russia Ukraine Crisis:ரஷ்யா- உக்ரைன் போர்..கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..அதிர்ச்சியில் மக்கள்..

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
 

Gold Rate increased highly
Author
Tamil Nadu, First Published Feb 24, 2022, 6:17 PM IST

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ.4,827-க்கு விற்பனையாகிறது.பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.38,616-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,600 விறப்னை செய்யப்படுகிறது. 

இந்நிலையில் மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்து 38,992 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.155 விலை உயர்ந்து ரூ 4,874 க்கு விற்பனையாகிறது.சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்பனையாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios