Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்க தமிழர்களின் மனிதாபிமானம்... கஜா புயல் நிதி திரட்ட மொய் விருந்து!

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மொய் விருந்து பிரபலமானதாக உள்ளது. வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு பணம் திரட்டி கொடுக்கவும் உறவினர்களால் நடத்தப்படுவது மொய் விருந்து.

Gaja cyclone relief...Moi virunthu in america
Author
Tamil Nadu, First Published Dec 11, 2018, 5:24 PM IST

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மொய் விருந்து பிரபலமானதாக உள்ளது. வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு பணம் திரட்டி கொடுக்கவும் உறவினர்களால் நடத்தப்படுவது மொய் விருந்து.

ஊரில் ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து ஆடு, கோழி கறியுடன் விருந்து கொடுப்பார்கள். இதில் கலந்துகொள்ள ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். விருந்தில் கலந்துகொள்பவர்கள் தாராளமாக பணத்தை மொய்யாக வழங்குவார்கள். விருந்தில் கலந்துகொண்டவர்கள், தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் பணத்தை வைத்துவிட்டு செல்லும் வழக்கமும் முன்பு இருந்தது. இந்த விருந்தில் வசூல் ஆகும் மொய்பணம் முழுவதும் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது வழக்கம். இதையொட்டி இன்று வரை புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் இந்த மொய் விரூந்து நடத்தப்படுகிறது. Gaja cyclone relief...Moi virunthu in america

இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மிகுந்த மனவேதனை அடைந்த அமெரிக்க வாழ் தமிழர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடிவு செய்தனர். இதைதொடர்ந்து, அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்ட திட்டமிட்டனர்.

 Gaja cyclone relief...Moi virunthu in america

அதன்படி கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான சைவ, அசைவ உணவுகள் விருந்தாக அளிக்கப்பட்டது. மொய் விருந்தில் கலந்துகொண்ட அனைவரும், சாப்பிட்ட பின் மொய் எழுதினர். இதில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் வசூலானது. Gaja cyclone relief...Moi virunthu in america

மொய் விருந்து மூலம் கிடைத்த 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொண்டு முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தெருவிளக்குகளை அமைக்க இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் இருந்தாலும் நமது சொந்த மண்ணில் உள்ள தமிழர்களுக்காக மொய் விருந்து நடத்தி நிதி திரட்டிய இந்த சம்பவம் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios