Asianet News TamilAsianet News Tamil

சவுக்கு சங்கரை தொடர்ந்து ரெட் பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து தூக்கிய போலீஸ்!

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Red pix Youtube channel Editor Gerald Felix Arrest tvk
Author
First Published May 11, 2024, 7:59 AM IST | Last Updated May 11, 2024, 8:51 AM IST

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக் யூடியூப் சேனல்  எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இனி யூடியூப்பில் யார் மனதையும் புண்படுத்துற மாதிரி கருத்துக்களை பதிவிடமாட்டேன்! நீதிபதியிடம் கதறிய சவுக்கு!

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த முன் ஜாமின் மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு யூடியூப் சேனல்கள் பொறுப்பெற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த ரெட் பிக் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது என கூறி காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார காலம் ஒத்தி வைத்தார். 

இந்நிலையில், டெல்லியில் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் சேர்மனிடம் மனு கொடுக்க சென்றிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டை இரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் தனிப்படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கோவை போலீசார் அவருக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு.. அடுத்தடுத்து அதிரடி சம்பவங்கள்..

கடந்த 2022ம் ஆண்டு கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே என்று பேசியதற்காக இவர் மீது சைபர் கிரைம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios