தூத்துக்குடி மாவட்ட கால்வாயில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, பாசனக் கால்வாயில் கருமை நிறத்தில் தண்ணீர் வரும் நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான மீன்களும் செத்து மிதப்பதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் மருதூர் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை செல்லும் பாசனக் கால்வாயில் கடந்த 2 தினங்களாக தண்ணீர் கருமை நிறமாக கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மீன்களும் செத்து மிதப்பதால், இந்நீரை நம்பியிருக்கும் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகுமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள ஏதாவதொரு தொழிற்சாலையின் கழிவுகள் கால்வாயில் கொட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், மொறப்பநாடு காவல்துறையினரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.