பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் குழந்தை தனமாக நடந்து கொள்கின்றனர் என்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கேள்வி எழுப்பி உள்ளார். 

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் குழந்தை தனமாக நடந்து கொள்கின்றனர் என்று பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கேள்வி எழுப்பி உள்ளார். 

2024-ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. எனினும் ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறிவிட்டார். இதை தொடர்ந்து ஆளுநரின் முழு உரையையும் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டப்பேரவை தொடங்கும் போதே தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் மாளிகை இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தது. அதில் “ கடந்த 9-ம் தேதி அரசிடம் இருந்து ஆளுநரின் வரைவு உரை ஆளுநர் மாளிகையில் பெறப்பட்டது. அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம்பெற்றிருந்தன. 

எனவே சில கருத்துக்களை தெரிவித்து திருப்பி அனுப்பினார். ஆளுநர் உரையின் தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் இசைத்திட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் ஆளுநர் கடிதம் எழுதி இருந்தார். 
ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அதில் உண்மைக்கு மாறான கருத்துகளையும், அரசியல் பாகுபாடு கொண்ட கருத்துகளை தெரிவிப்பதாக கருதக்கூடாது. ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது. 

விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்... ஆளுநரின் செயலுக்கு வருத்தம்- சட்டப்பேரவையில் விடாமல் அடிக்கும் திமுக அரசு

எனவே நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் முதல் பத்தியை மட்டும் படித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்களை இடம்பெற்றிருந்ததால் அதை படித்தால் அரசியலமைப்பை கேலிக்குரியதாக மாற்றிவிடும் என்ற காரணத்தால் அதை முழுமையாக படிக்கவில்லை. 

பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அவரின் உரை முடியும் வரை ஆளுநர் அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்த உடன் இசைக்கப்பட்ட தேசிய கீதத்திற்கு ஆளுநர் எழுந்து நின்றார். அப்போது நாதுராம் கோட்சே போன்றவர்களை ஆளுநர் பின்பற்றுவதாக கூறி தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பை கெடுத்துவிட்டார்.” என்று தெரிவித்தார்.

ஒரே ஒரு குறை மட்டும்தான்.. ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள்.. திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

இந்த நிலையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் ஆளுநரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ ஆர்.என். ரவி மன்னிக்க வேண்டும். உங்களுடைய நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…