Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம்... ஆளுநரின் செயலுக்கு வருத்தம்- சட்டப்பேரவையில் விடாமல் அடிக்கும் திமுக அரசு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் உரையை புறக்கணித்த ஆளுநரின் செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்தும் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
 

Condolence resolution for Vijayakanth in Tamil Nadu Legislative Assembly KAK
Author
First Published Feb 13, 2024, 8:11 AM IST

ஆளுநர் தமிழக அரசு மோதல்

தமிழக சட்டசபையில் ஆண்டு தோறும் ஆளுநர் உரையோடு கூட்டமானது தொடங்கும் அந்த வகையில், நேற்று இந்தாண்டிற்கான உரையை நிகழ்த்த ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் தனது உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் ஆரம்பத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லையென புகாரை கூறி தனது உரையை வாசிக்க மறுத்தார்.

அடுத்ததாக சபாநாயகர் அப்பாவு ஆளுநர் வாசிக்க மறுத்து உரையை தமிழில் வாசித்தார். இறுதியாக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்தும் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.  இதனையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை வருகிற 22ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

Condolence resolution for Vijayakanth in Tamil Nadu Legislative Assembly KAK

விஜயகாந்திற்கு இரங்கல்

அதன் படி வருகிற 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் கூட்டம் தொடங்கியதும், மறைந்த சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர்  எஸ். எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓடிஸா மாநில முன்னாள் ஆளுநருமான எம். எம். இராஜேந்திரன், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படவுள்ளது.

Condolence resolution for Vijayakanth in Tamil Nadu Legislative Assembly KAK

ஆளுநரின் செயலுக்கு வருத்தம்

இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன் மொழியவுள்ளார்.
அதில், தமிழ்நாடு அரசால் ஏற்பளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட ஆளுநர் உரையில் 46 பக்கங்களில் முதல் பக்கத்தை மட்டும் படித்தும், தானகவே சில பக்கங்களை இணைத்தும் ஆளுநர் உரையாற்றிதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாகவும்,   இதை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட ஆளுநர் உரைக்கு  உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.. இதனிடையை நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு நிலவரம், மழை வெள்ள பாதிப்பு நிவாரணம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனை, இலவச வேட்டி சேலை ஊழல், முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படியுங்கள்

இபிஎஸ்க்கு சந்தேகம் இருந்தால் கிளாம்பாக்கத்து வாங்க! என்னென்ன வசதிகள் இருக்குனு காட்டுறோம்! அமைச்சர் சிவசங்கர்

Follow Us:
Download App:
  • android
  • ios