அமைச்சர் பொன்முடியின் இடங்களில் ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்
அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது.
அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. காலை முதல் நடைபெற்று வந்த ரெய்டுக்குப் பின் அமைச்சர் பொன்முடி சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை எண்ணப்பட்டு வருகிறது என்றும் அமலாக்கத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. திங்கள் இரவு 8.30 மணி அளவில் சாஸ்திரி பவன் அமலாக்கதுதறை அலுவலகத்தில் தொடங்கிய விசாரணை 4 மணிநேரத்திற்கு மேல் நீடிக்கிறது. இந்த விசாரணையில் அமைச்சர் பொன்முடிக்கு அவ்வப்போது இடைவேளை வழங்கி கேள்விகள் கேட்கப்படுகிறது என்றும் அவர் அளிக்கும் பதில்கள் அதிகாரிகளுக்கு திருப்தி கொடுக்காவிட்டால் நாளையும் விசாரணை தொடரும் வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
ஆஸி., கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்! சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பகுதியா?
இந்தோனேசியாவில் உள்ள சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுவது பற்றியும் அமலாக்கத்தறை விசாரிக்கிறது. இதில், பொன்முடி சார்பில் சுரங்க நிறுவனத்துக்கு 100 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது என அமலாக்கத்துறை தகவலில் தெரியவருகிறது.
2006 முதல் 2011 வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் தனது நெருங்கிய உறவினர்கள் 5 பேருக்கு குவாரி உரிமைகளை முறைகேடாக வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
விசாரணையின்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அவரது லேப்டாப்பில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். காரில் நடத்திய சோதனையில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் இருந்ததால் பொன்முடியின் மகனுக்குச் சொந்தமான இரண்டு கார்களையும் அமலக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஏற்றமதியில் தமிழ்நாடு நம்பர் 1! நிதி ஆயோக் தரவரிசையில் குஜராத், மகாராஷ்டிரா ஓரங்கட்டி சாதனை!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனையிட்டது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்திருக்கிறதா என்ற நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவரும் அழைத்துச் செல்லப்பட்டு தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமைச் செயலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தக்கூடும் என்று தெரிகிறது.
காலையிலேயே ஏன் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமிக்கு அண்ணாமலை அட்வைஸ்