காலையிலேயே ஏன் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமிக்கு அண்ணாமலை அட்வைஸ்

டாஸ்மாக் கடைகளை அதிகாலையிலேயே திறந்து வைப்பது பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்று அண்ணாமலை வலியிறுத்தியுள்ளார்.

Why sell alcohol in the morning? Annamalai Advice to Minister Muthuswamy

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அண்மையில் டாஸ்மாக் திறக்கும் நேரம், டெட்ரா பாக்கெட் எனப்படும் சிறிய அளவிலான மது விற்பனை ஆகியவை குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் முத்துசாமியின் டாஸ்மாக் குறித்த கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், டாஸ்மாக் கடைகளை அதிகாலையிலேயே திறந்து வைப்பது பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்று வலியிறுத்தியுள்ளார்.

அமைச்சர் பொன்முடி, எம்.பி. கௌதம் சிகாமணியை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்!

மேலும், தூய்மைப் பணியாளர்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவதைக் குறிப்பிட்டு அதை பயன்படுத்திக்கொள்வது பற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ட்விட்டரில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் திரு. முத்துசாமி அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல. 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 425, தமிழகத்தில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அமைச்சரோ, கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு, மத்திய அரசு, குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு ரூபாய் 40,000, தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு, இரண்டு வருடங்களுக்கு,  மாதம் ரூபாய் 3000, தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க ரூபாய் ஐந்து லட்சம் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க, நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி, ஆண்டுதோறும் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. 

இந்தத் திட்டங்களை இது வரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக  சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட 11 பேருக்கு போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர் பதவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios