ஆஸி., கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்! சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பகுதியா?
ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மமான பொருள் ஒன்று கரை ஒதுங்கியது பற்றி விசாரணை நடந்து வருகிறது. அது சந்திரயான்-3 விண்கலத்தின் பகுதியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் சிலர் யூகிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான பொருள் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பலவிதமான ஊகங்கள் பரவி வருகின்றன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிரீன் ஹெட் அருகே ராட்சத சிலிண்டர் போன்ற பொருள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த மர்மமான பொருள் 2014ஆம் ஆண்டு காணாமல் போன MH370 என்ற விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அப்படி இருக்க சாத்தியமில்லை என விமான நிபுணர் ஜெஃப்ரி தாமஸ் சொல்கிறார். "இது MH370 விமானத்தின் பாகமாக இருக்க வாய்ப்பில்லை. இது போயிங் 777 இன் எந்தப் பகுதியும் இல்லை. உண்மை என்னவென்றால், MH370 ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனது. அது இவ்வளவு காலத்தில் அதிக தேய்மானத்தைக் அடைந்திருக்கும்" என்று ஜெப்ரி தாமஸ் கூறுகிறார். மாறாக, கடந்த ஆண்டு ஏவப்பட்ட ராக்கெட்டில் இருந்து கடலில் விழுந்த குப்பையாக இருக்கலாம் என்று தாமஸ் கருதுகிறார்.
கோழி ரத்தத்தைப் பூசிக்கொண்டு தொழிலதிபர் மீது போலியாக பாலியல் புகார் கூறிய பெண்!
இந்த மர்மப் பொருள் பற்றி மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே சமூக வலைத்தளங்களில் இந்த மர்மமான பொருளைப பற்றி நெட்டிசன்கள் மாறுபட்ட கணிப்புகளைக் கூறிவருகின்றனர்.
விண்வெளித் தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர். ஆலிஸ் கோர்மன், இந்தியாவின் சந்திரயான்-3 ல் இருந்து பிரிந்த எரிபொருள் உருளையாக இருக்கலாம் என்ற ஊகத்தை முன்வைத்துள்ளார். இன்னும் சில சமூக ஊடக பயனர்கள் இது இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
காலையிலேயே ஏன் மது விற்பனை? அமைச்சர் முத்துசாமிக்கு அண்ணாமலை அட்வைஸ்