*    ”சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் காவலர்களே இல்லை என்றாலும், என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை உழைப்பேன். நான் தப்பு செய்தால் என்னுடைய காலரை பிடித்துக் கேள்வி கேட்கலாம். இடமாறுதல் கேட்பவர்கள், தங்களின் கடமைகளை முடித்துவிட்டுக் கேட்டால், நானே மாலை போட்டு அவர்களை வழியனுப்புவேன்.”- என்று பொன்.மாணிக்கவேல் கொதித்திருக்கிறார். 
(ஆபீஸருக்கு ஒரு அரை லிட்டர் இஞ்சி சோடா பார்சேல்ல்ல்ல்ல்ல்....)

*    தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி விஷாலுக்கு போவதாகவும் சொல்கிறார்கள்: என தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் சாடியிருக்கிறார். 
(ப்பார்றா, ஒரு நடிகரே தயாரிப்பாளர் சங்க தலைவரா இருப்பார், அவர் மெலேயே திருட்டு வி.சி.டி. லாபத்தில் பங்கு போகுதுன்னு புகாராம். ஹ்ஹா! விஷாலோட இந்த கதையையே தனி படமா எடுக்கலாமே.)

*    ஆயிரம் இருந்தாலும் தினகரன் தான் உங்க தலைவர். அவர் சொல்றதைக் கேளுங்க. அவரு கொஞ்சம் கூட்டிக் குறைச்சு ஏற்றி இறக்கி பேசலம். ஆனால், அவருக்கு வழிகாட்ட நான் இருக்கேன்!: என்று கூறியுள்ளார் சசிகலா. 
(நீங்க இருப்பீங்க ஸ்மால் மம்மி! ஆனால் தினகரன் தலைமையை ஏற்றபடி அந்த கட்சியில ஆளுங்க இருப்பாங்களான்னு செந்தில்பாலாஜிய பார்த்த பிறகு டவுட்டு போட்டு ஆட்டுது. )

*    என்னை ஏற்கனவே இரண்டு முறை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இப்போது மூன்றாவது முறையாக நீக்கியுள்ளார்கள்: என்று பா.ம.க.விலிருந்து நீக்கப்பட்ட வி.ஜி.கே.மணி கூறியுள்ளார். 
(ஆக நீக்குறது, சேர்க்குறதுமே ஒரு வெளாட்டா இருந்திருக்குது இவிய்ங்களுக்கு. எம்.எல்.ஏ., எம்.பி.ன்னு ஒரு பதவியும் இல்லாத நேரத்துல எப்டில்லாம் வெளாடுறாய்ங்க பாருங்க. இது புரியாம ஒரு கூட்டம் ஓவரா ஃபீலிங்கு காட்டுது.)

*    நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணி ரொம்ப காலமாகிடுச்சு. கூடிய சீக்கிரம் இந்த கேப்-பை சரி பண்ணி, ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணலாம்: என்று வடிவேலுவிடம் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். 
(க்கும் அப்போ ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பின்னாடியும் ஒரு படம் இருக்குதுன்னு சொல்லுங்க. அப்புறம் என்னத்த ரஜினி அரசியலுக்கு வந்து, கட்சி ஆரம்பிச்சு, கோட்டைய  பிடிச்சு...போங்க பாஸு!)