' குமாஸ்தா ' வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.! இறங்கி அடித்த சி.வி.சண்முகம்

 உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.

CV Shanmugam has said that Election Commission has no authority to interfere in internal party affairs KAK

நீதிமன்ற தீர்ப்பு- அதிமுக கருத்து

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இன்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் , உறுப்பினராக இல்லாதவர்கள் அதிமுக போர்வையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி என்பவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர். தேர்தல் ஆணையம் எங்களிடம் கருத்துகளை கேட்டபோது 23.12.24 ல் தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் பதில் அளித்தோம்.

எடப்பாடி பழனிசாமியின் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்! குஷியில் ஓபிஎஸ்!

CV Shanmugam has said that Election Commission has no authority to interfere in internal party affairs KAK

விசாரணைக்கு ஏற்க கூடாது

சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல எனவே அவரது மனுவை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். அதிகாரம் இல்லாதபோதும் விசாரணை மேற்கொண்டது தேர்தல் ஆணையம் , அதை எதிர்த்து அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது , தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரத்தை விசாரணைக்கு ஏற்க கூடாது என்ற இரண்டு அம்சங்கள்தான் அதிமுகவின் மனுவில் இருந்தன. எங்கள் கோரிக்கையை ஏற்கனவே விசாரணையின் தொடக்கத்திலேயே நீதிமன்றம் ஏற்றது என தெரிவித்தார். 

உட்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க தனக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் முதலில் முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்திறகு 2 அதிகாரங்கள் மட்டுமே உண்டு.  தேர்தல் ஆணைய விதி 29A ன் படி புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய , அந்த  கட்சியின் சட்ட திட்டத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் . தேர்தல் ஆணையம் புதிய கட்சியின் சட்ட திட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து , அதை அங்கீகரிக்கும் அதிகாரம் உண்டு. 

ஓபிஎஸ் வாங்கிய நிலம்.! பட்டா ரத்து - வெளியான ஷாக் தகவல்- ஏன் தெரியுமா.?

CV Shanmugam has said that Election Commission has no authority to interfere in internal party affairs KAK

தேர்தல் ஆணையத்தின் பணி

தேர்தல் ஆணைய விதி 29A9 ன் படி  அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட கட்சி அக்கட்சியின் பொறுப்பாளர் , அலுவலக முகவரி , சட்ட திட்ட  மாற்றங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அது சரியா தவறா என விசாரிக்கும்  அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. தெரிவிக்கப்பட்ட மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என ஆவேசமாக தெரிவித்தார். கட்சி விதிகளில் குறைகள் இருந்தால் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் : தேர்தல் ஆணையத்தால்  விசாரிக்க முடியாது. கட்சியில் பிளவு ஏற்பட்டால்  எந்த குழு உண்மையிலேயே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது  என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியும்.  

CV Shanmugam has said that Election Commission has no authority to interfere in internal party affairs KAK

நீதிமன்றம் செல்வோம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையிலேயே முடிவெடுப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறி விட்டது.  உட்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை   தேர்தல் ஆணையமே ஒத்துக் கொண்டுள்ளது. தனக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் ஏன் விசாரணை நடத்த வேண்டும். அதிமுக வாதங்கள் முழுவதுமாக இன்று ஏற்கப்பட்டுள்ளன. மூல வழக்கை பொறுத்தே எங்கள் முடிவு இருக்கும் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறி விட்டார். தேர்தல் ஆணையம் தவறாக முடிவெடுத்தால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என சிவி சண்முகம் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios