ஓபிஎஸ் வாங்கிய நிலம்.! பட்டா ரத்து - வெளியான ஷாக் தகவல்- ஏன் தெரியுமா.?
ஓ.பன்னீர்செல்வம், தேனியில் வாங்கிய 40 சென்ட் நிலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என்பதும், விதிமுறைகளை மீறி ஓபிஎஸ் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

ஓபிஎஸ் வாங்கிய நிலம்.! பட்டா ரத்து செய்த தமிழக அரசு - வெளியான ஷாக் தகவல்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம், அதிகார போட்டியால் நடைபெற்ற உட்கட்சி மோதல் காரணமாக தர்மயுத்தம் மேற்கொண்டார். அடுத்ததாக முதலமைச்சர் பதவியை இழந்த அவர், தனி அணியாக செயல்பட்டார். சுமார் ஒரு வருட காலம் நீடித்த இந்த போராட்டம் இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து அதிமுக ஆட்சியை வழிநடத்தினர். அப்போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
பஞ்சமி நிலம் - சிக்கலில் ஓபிஎஸ்
இந்த காலத்தில் தனது சொந்த மாவட்டமான தேனியில் 40 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலம் தான் தற்போது ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தேனி ராஜாகளம் என்ற பகுதியில் 1991-ல் மூக்கன் என்ற ஒரு பட்டியல் இனத்தவருக்கு 40 சென்ட் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2008இல் தலித் அல்லாத ஹரிசங்கர் என்பவருக்கு அந்த 40 சென்ட் நிலத்தை மூக்கன் விற்பனை செய்தார். அரசிடம் இருந்து பஞ்சமி நிலத்தை பெறும் நபர் 15 ஆண்டுகள் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது.
ஓபிஎஸ் நிலம் பட்டா ரத்து
மேலும் அதன் பிறகும் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும் மட்டுமே நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த விதியை மதிக்காமல் ஹரிசங்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை ஹரிசங்கர் என்பவரிடமிருந்து ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2019-ல் 40 சென்ட் நிலத்தை வாங்கி, தன்னுடைய பெயருக்கு பட்டா மாறுதல் செய்தார்.
பஞ்சமி நிலத்தை விலைக்கு வாங்கி முறைகேடாக பட்டா மாறுதல் செய்தது தவறு என்று மூக்கனின் மகன் பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் SC/ST ஆணையத்தில் புகார் அளித்தனர். ஓ.பன்னீர்செல்வம் பஞ்சமி நிலத்தை தனது பெயருக்கு வாங்கி பட்டா மாறுதல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
நிலம் வாங்குபவர்கள் உஷார்
இதனையடுத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஓ.பன்னீர் செல்வம் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்து பஞ்சி நிலத்திற்கு பட்டா வாங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் தேனி வட்டாட்சியர் உடனடியாக அந்த பட்டா மாறுதலை ரத்து செய்து,சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க SC/ST ஆணையம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் நிலம் வாங்குபவர்கள் நிலத்தின் தாய் பத்திரம் உள்ளிட்டவைகளை சரிபார்த்து வாங்க வேண்டும் எனவும், பஞ்சி நிலங்களை வேறு நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்ய வரும் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.