திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர்மழையால் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இம்மாவட்டத்தில் செண்பகனூர், மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், வடகௌஞ்சி, மாட்டுப்பட்டி, வில்பட்டி போன்றவை விவசாயப் பகுதிகளாக உள்ளன.

இந்த பகுதிகளில் பீட்ரூட், முள்ளங்கி, கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 

தென்மேற்கு பருவமழையை நம்பி இந்த பயிர்கள் பயிரிடப்பட்டி இருந்தாலும் பயிர்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யமுடியுமா? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் இப்பகுதிகளில் தொடர்ந்த் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், நீரோடைப் பகுதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் புறநகர்ப் பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனை குறைந்துள்ளது.