டெங்குவின் உச்சக்கட்ட பாதிப்பு இதுதான்..! 

டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், டெங்கு எதனால் ஏற்படுகிறது நாம் என்ன செய்ய வேண்டும், நம்மை பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இதற்கு முன்னதாக நாம் பார்த்தோம்.

டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டால், அதிக காய்ச்சல், தலைவலி, சருமத்தில் தோன்றும் சிறு சிறு ரத்த சிவப்பு நிற புள்ளிகள் இது போன்ற அறிகுறிகளை தவிர மேலும் பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்றது டெங்கு வைரஸ். அது என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

காய்ச்சல் தொடர்ந்து அதிகமாகவே காணப்படும். இதனால் ரத்த நாளங்கள் மற்றும் சில சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலின் பல்வேறு பாகத்திலிருந்தும் உடல் உறுப்புகளில் இருந்தும் ரத்த கசிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. உதாரணமாக மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்த கசிவு ஏற்படலாம். கல்லீரல் வீக்கம் ஏற்படும்.

ரத்த சுழற்சி மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உடலில் இருந்து ரத்தம் வெளியேறும். கடைசி கட்டத்தில் உயிரிழக்க நேரிடலாம். இதற்கு ஆங்கிலத்தில் டெங்கு ஷாக் சின்ரோம் என கூறுவார்கள்.

டெங்குவால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்யபட்டவுடன், அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தேவையான சிகிச்சையை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சில சமயத்தில் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது என எண்ணி அப்படியே விட்டுவிட்டோம் என்றால், அது அதிகரித்து இதுபோன்ற மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதில் குறிப்பாக நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக உள்ளவர்கள்  ஒருவேளை டெங்குவால் பாதிக்கப்பட்டால் கடைசியில் அதிக ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். எனவே முன்கூட்டியே சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.