Asianet News TamilAsianet News Tamil

எதற்கும் பயன்படாததாக மாறிய சென்னை ஆறுகளின் தண்ணீர்... தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!!

சென்னையில் இருக்கும் ஆறுகளின் தண்ணீரை எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியாது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

chennai rivers that have become unfit for life says TNPCB
Author
First Published Jan 19, 2023, 6:27 PM IST

சென்னையில் இருக்கும் ஆறுகளின் தண்ணீரை எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியாது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்துக்குள் இருக்கும் அனைத்து நீர்நிலைகளின் மாதிரிகளும் திரட்டப்பட்டு, 32 அளவுகோள்களுடன் பரிசோதிக்கப்பட்டது. இந்த பறிசோதனையின் முடிகள் குறித்த தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் பகுப்பாய்வு அறிக்கையில், சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் தண்ணீரை எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியாது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் 41 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், ஓரிடத்தில் கூட, அந்த நீரில் ஆக்ஸிஜன் கலந்திருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்

கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஆறுகளில் விடப்படும்போது, அதில் உயிரி ஆக்ஸிஜன் 20 சதவீதத்துக்கு மேல் இருக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் உயிரி ஆக்ஸிஜன் அளவு 56க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் நீர் கூவத்திலும், பெருங்குடி நீர் அடையாறு ஆற்றிலும் கலக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு லிட்டர் ஆற்று நீருக்கு 700 முதல் 5000 மில்லி கிராம் வரை திடக்கழிவு இந்த ஆற்று நீரில் கலக்கப்படுவதாகவும், ஆற்று நீரில் கலக்கப்படும் உலோகக் கழிவு காரணமாக நீரின் கடத்தல் திறன் அதிகமாக இருப்பதாகவும், ஒரு லிட்டர் தண்ணீரில் 70 - 300 மில்லி கிராம் வரை மனிதக் கழிவுகளும், 300 முதல் 1500 மில்லி கிராம் வரை நுண்கிருமிகள் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் வேலைவாய்ப்பு... ரூ.49,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

மழைக் காலங்களில் கூட, இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரில் ஆக்ஸிஜன் கலக்க முடியாத அளவுக்கு, அதன் முகத்துவாரத்துக்கு அருகிலேயே தடுத்து நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்து நிபுனர்கள் கூறுகையில், சென்னை ஆறுகள் செத்து பல காலம் ஆகிவிட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுகள் இன்று அதனை உறுதி செய்துள்ளன. இந்த ஆறுகளில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் குடிநீர் ஆதாரமாக இருந்த 1800ஆம் ஆண்டுகளிலேயே அது சாகத் தொடங்கிவிட்டன. இதனுடன் நகரமயமாதல் எனும் செயலாக்கம் இணைந்து கொண்டதால், மிக விரைவாகவே ஆறுகள் செத்துவிட்டன என்று தெரிவித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios