கட்டணமே இல்லாமல் அறுபடைவீடு சுற்றுலா.! நாளை தொடங்குகிறது- அறநிலையத்துறை அறிவிப்பு

தமிழக அரசு, 60 - 70 வயதுடைய மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்கிறது. இந்த ஆண்டு 17.12.2024 அன்று பழநியில் இருந்து இரண்டாம் கட்டப் பயணம் தொடங்குகிறது. தங்குமிடம், உணவு, பயணப் பைகள் போன்ற வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

Charity department announcement that Arupadai Veedu is going to start spiritual tourism day KAK

தமிழக அரசின் ஆன்மிக திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆன்மிக திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கோயில்களில் குடமுழக்கு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்க்கும் வகையில் ஆன்மிக சுற்றுலாவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறநிலையத்துறை சார்பாக  மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மூத்த குடிமக்கள் பங்கேற்கும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும் இலவசமாக அழைத்து செல்லப்பட்டு வருகிறது.

இலவசமாக ஆன்மிக சுற்றுலா

மேலும் இராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்தி டும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் அழைத் துச் செல்லப்பட்டு வருகின்றனர். அந்த திட்டத்தின் காழ் கடந்த ஆண்டு 1,008 மூத்த குடிமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் தமிழக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது.

அறுபடை வீடு - ஆன்மிக பயணம்

இதனையடுத்து இந்தாண்டிற்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்டப் பயணம் 200 மூத்த குடிமக்களுடன் கடந்த 26.11.2024 அன்று கந்த கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயணமானது திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் நாளை (17.12.2024) பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தொடங்கவுள்ளது. .  இக்குழுவானது பழநியில் புறப்பட்டு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி ஆகிய திருக்கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் வாய்ப்பு

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படும் என கூறினார். மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள். திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்லவுள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios