திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் கொடுத்த தேவஸ்தானம்.! சீக்கிர தரிசன டிக்கெட் ரத்து
திருப்பதி கோயிலுக்கு ஒரு நாள் சுற்றுலாவில் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீக்கிர தரிசன டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. .
திருப்பதி கோயில் தரிசனம்
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிகிறார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதி கோயிலுக்கு பக்தர்களை சுற்றுலா துறை மூலாமாக அழைத்து செல்லப்பட்டு வருகிறது அந்த வகையில் ஒரு நாளு சுற்றுலா என்ற பெயரில் ஒரே நாளில் சென்னையில் இருந்து திருப்பதி சென்று சாமி தரசினம் செய்த பின்னர் மீண்டும் திரும்பும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கட்டணம் செலுத்தப்பட்டு சீக்கிர தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. தற்போது சீ்க்கிர தரிசன டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி சீக்கிர தரிசன டிக்கெட்
இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) 1974 ஆம் ஆண்டு முதல் சென்னையிலிருந்து ஒருநாள் திருப்பதி சுற்றுலா பயணத்தை (திறந்த முறை டிக்கெட் / இலவச தரிசனம்) இயக்கி வருகிறது. 1997 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் அழைத்து வரப்படும் பக்தர்களுக்கு, விரைவான தரிசனத்திற்கு அனுமதி அளித்து. சீக்கிர தரிசன டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியது. தற்போது வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு தினசரி 400 சீக்கிர தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில்,
பக்தர்கள் பாதிப்பு
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, ஓசூர், கடலூர் மற்றும் பழனி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கான பயணம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம், அனைத்து மாநிலங்களுக்கான சுற்றுலா மற்றும் பிற துறைகளுக்கான SED (சிறப்பு நுழைவு தரிசனம்) டிக்கெட்டுகள் வழங்குவதை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.சீக்கிர தரிசன (SED) டிக்கெட்டுகளை ரத்து செய்வது. தமிழகத்திலிருந்து திருமலை வழிபாட்டிற்க்கு வரும் பக்தர்களை மிகவும் பாதிக்கும் என்பதால்,
ஆந்திரா அரசிடம் கோரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆந்திரபிரதேச மாநிலத்தின் அறநிலையங்கள் துறை அமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டி இன்று ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நேரில் சந்தித்து மீண்டும் திருப்பதி சீக்கிர தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.