அன்னபூர்ணா செய்த செயலால் அலறிய திருவண்ணாமலை! வேறு வழியில்லாமல் தோளில் சுமந்த வனக்காவலர்! நடந்நது என்ன?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 13ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் மலையில் சிக்கி 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் காத்திகை தீப திருவிழா வெகு 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும், 2668 அடி மலை உச்சியில் மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகா தீபத்தை மலையில் காணா அடையாள அட்டை கொடுத்து 2000க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிங்க: Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீண்டும் கைது! என்ன காரணத்திற்காக தெரியுமா?
ஆனால், இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், அடுத்தடுத்து 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதனையடுத்து பெரும் சவால்களுக்கு இடையே 7 பேரின் உடல்கள் ஒரு வழியாக மீட்கப்பட்டது. மலையில் பல இடங்களில் மண் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், மலை வழுவழுப்பாகவே காணப்பட்டது. இதனால் தீபத்திருவிழா நடக்குமா? மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து, திட்டமிட்டப்படி இந்தாண்டு மலையில் மகா தீபம் ஏற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மகா தீபத்தின் போது மலையேற பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆந்திராவை சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண் அத்துமீறி மலை மீது ஏறியுள்ளார்.
இதையும் படிங்க: Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு!
இதையடுத்து திரும்ப வரத் தெரியாததால் 2 நாட்களாக தீப மலை மீது தவித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒருவழியாக அந்த பெண் இருப்பிடத்தை கண்டுபிடித்த வனக்காவலர் அங்கு சென்று அவரை பாதுகாப்பாக மீட்டனர். கடந்த 2 நாட்களாக உணவு இல்லாததால் சோர்வாக காணப்பட்ட அன்னபூர்ணாவை வனக்காவலர் ஒருவர் தனது முதுகில் சுமந்து மலைக்கு கீழே கொண்டு வந்தார். வனக்காவலரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுதொடர்பான வீடியோயும் வைரலாகி வருகிறது.