tamilnadu

பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு

Image credits: our own

பொங்கல் பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. 

Image credits: our own

பொங்கல் பரிசு

அது மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. 

Image credits: our own

அரசு ஊழியர்கள்

கடந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 தமிழக அரசு வழங்கவில்லை. 

Image credits: our own

தமிழக அரசு

ஆனால், இந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. 

Image credits: our own

மகளிர் உரிமைத் தொகை

அதேபோல் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பபடும்.

Image credits: our own

பொங்கல் பண்டிகை

ஆனால் ஜனவரி மாதத்துக்கான  மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்னதாக அதாவது ஜனவரி 10ம் தேதி வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது. 

Image credits: our own

2000 கொடுக்கும் தமிழக அரசு

ஏற்கனவே அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 இரண்டையும் சேர்த்து 2000 ரூபாய் கிடைக்கும். 

Image credits: our own

குஷியில் பொதுமக்கள்

ஒரே நேரத்தில் இரண்டு தொகையும் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். 

Image credits: our own

கிறிஸ்துமஸ் முந்தைய நாளும் விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!

பொங்கல் பரிசு தொகை இந்தாண்டு எவ்வளவு.? யாருக்கெல்லாம் கிடைக்காது.?

எந்த மாநிலத்தில் குறைவான மின்சார கட்டணம்.? தமிழகம் எத்தனையாவது இடம்.?

மூட்டை மூட்டையாக வந்த வெங்காயம்.! இனி ஒரு கிலோ இவ்வளவு தான்