tamilnadu
பொங்கல் பண்டிகைய ஜனவரி மாதம் 14,15,16 ஆகிய தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வரவுள்ளதால் பல லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். சொந்த கிராமத்தில் உறவினர்களோடு கொண்டாட திட்டம்
தமிழர்களின் திருநாளையொட்டி தமிழக அரசு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டு புளி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் இடம்பெற்றது.
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக பணம் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்ததால் 2023 - 2024ஆம் ஆண்டுகளில் 1000 ரூபாய் பணத்தோடு கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையொட்டி பரிசு தொகை தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை- இந்தாண்டும் 1000 ரூபாய் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்
பொங்கல் பரிசுக்காக பணம், பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலமாக வழங்க சுமார் 238.92 கோடி ரூபாய் செலவிட திட்டம்
அரசி அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சக்கரை மற்றும் உயர் வகுப்பு அட்டை உள்ளவர்களுக்கு வங்கப்படாது என தகவல்
ஓரிரு மாதங்களுக்கு முன்பாக புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு இந்தாண்டு பொங்கல் பணம் பரிசு தொகுப்பு கிடைக்காது என தகவல்- உறுதியான தகவல் விரைவில் வரும்