04:33 PM (IST) Jul 19

இதை பார்க்க என் தாத்தா இல்லையே: கண் கலங்கிய உதயநிதி!

திருவண்ணாமலையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவை நினைத்து கண் கலங்கினார்.

02:29 PM (IST) Jul 19

தொடர்ந்து ஓரங்கட்டப்படும் கனிமொழி? திமுகவுக்குள் அடுத்த சலசலப்பு!

கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி., கலந்து கொள்ளாதது திமுகவினுள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது

01:23 PM (IST) Jul 19

கலைஞர் நூலகம்: ஜெயக்குமாருக்கு காழ்புணர்ச்சி - சு.வெங்கடேசன் எம்.பி., சாடல்!

கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்புணர்ச்சி காரணமாக பேசுகிறார் சு.வெங்கடேசன் எம்.பி. சாடியுள்ளார்

01:06 PM (IST) Jul 19

கிடா வெட்டி அதிகாரிகளுக்கு விருந்து - சேலத்தில் ருசிகர சம்பவம்

சேலத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதி செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கிடா வெட்டி விருந்து வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது

01:05 PM (IST) Jul 19

அமலாக்கத்துறை சோதனை இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும்: வேல்முருகன் சாடல்!

மத்திய அரசின் அழுத்தத்தால் அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்

12:16 PM (IST) Jul 19

ஏ கிளாஸில் செந்தில் பாலாஜிக்கு சிறையில் கிடைக்கும் வசதி

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையின் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் இருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும்

11:47 AM (IST) Jul 19

ஆளுங்கட்சியை அலறவிடும் அமலாக்கத்துறை.. அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அடுத்த ஸ்கெட்ச் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு?

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை புதிய ஆதாரங்களை இன்று தாக்கல் செய்கிறது. 

11:11 AM (IST) Jul 19

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: இதெல்லாம் வேலைக்கு ஆகாது - மதுப்பிரியர்கள் யோசனை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது

11:03 AM (IST) Jul 19

ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்

சென்னை மின்சார ரயிலில் நேற்று மாலை சேப்பாக்கம் - கடற்கரை ரயில் நிலையங்கள் இடையே கல்லூரி மாணவர்கள் மோதல் ஏற்பட்டது. அவசர கால அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் அரை மணி நேரம் ரயில் தாமதமானது. 

10:35 AM (IST) Jul 19

உலகின் வலிமையான பாஸ்போர்ட் சிங்கப்பூர்: இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.

10:35 AM (IST) Jul 19

பெங்களூருவில் தீவிரவாத தாக்குதல்: சதித்திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது!

பெங்களூருவில் தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதுடன், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

09:15 AM (IST) Jul 19

முதலமைச்சருடன் பொன்முடி சந்திப்பு!!

அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்

08:29 AM (IST) Jul 19

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை

சிறிய கட்சி, பெரிய கட்சி பாகுபாடு இல்லாமல் பாஜக அணியில் உரிய மரியாதை உண்டு. பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளுடன் இருக்கின்றன. அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் பிறழ மாட்டோம். பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

08:00 AM (IST) Jul 19

Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் 5 நேரம் மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையாறு, வியாசர்பாடி, போரூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

08:00 AM (IST) Jul 19

கோரமண்டல் விரைவு ரயில் 4 மணி நேரம் தாமதம்

சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் இடையே இயங்கும் கோரமண்டல் விரைவு ரயில், இன்று காலை 7 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 4 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.