10:28 PM IST
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா
விரைவில் மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
அருண் கோயல், 1985-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2022ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற ஒரு நாள் கழித்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்றவரை உடனடியாக தேர்தல் ஆணையராக நியமிக்க அப்படி என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியது.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா! மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீர் முடிவு!
3:27 PM IST
போதைப் பொருள் மாஃபியா.. திமுகவுக்கு தொடர்பு.. அடித்து ஆடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி..!
வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.
1:18 PM IST
2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கு.. ஜாபர் சாதிக் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
12:53 PM IST
வீடு அடமானம்.. கடன் வாங்கியவர் இறப்பு.. பணத்தை கேட்ட ஊழியர்கள்- நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி!
எக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்குபவர் இறந்த சூழலில், நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கட்ட வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
12:30 PM IST
#BREAKING : போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
12:07 PM IST
பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு வீடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
12:06 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. ரூ.22,788 நிலுவைத் தொகை + 50 சதவீதம் அகவிலைப்படி..
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் கட்டணம் மார்ச் மாதத்தில் அல்ல, ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
11:59 AM IST
விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த ஆதவ் அர்ஜுனா?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:36 AM IST
2 புதிய படைப்பிரிவுகள்.. இந்திய ராணுவம் கையில் எடுத்த ‘பினாகா’.. சீனாவுக்கு ஆப்பா.? வெளியான தகவல்..!
படைப்பிரிவுகளுக்கான பயிற்சி நடந்து வருகிறது. இது ஆறு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமம் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ போன்ற தனியார் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பினாகா முக்கியமான இலக்குகளுக்கு எதிராக விரைவாக ஃபயர்பவரை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
10:14 AM IST
அதிகாலையில் அடர்ந்த காட்டிற்குள் பயணம் சென்ற பிரதமர் மோடி.. யானை சஃபாரி.. வைரல் போட்டோஸ்..!!
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அதிகாலை 5 மணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, யானையுடன் ஜீப் சஃபாரியில் மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:06 AM IST
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை! சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!
சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
9:08 AM IST
இரண்டே மாதங்களில் 390 வழக்குகள்.. FedEx கூரியர் மோசடி நிகழ்வது எப்படி? இதை எவ்வாறு தடுப்பது?
FedEx கூரியர் மோசடி தொடர்பாக இரண்டே மாதங்களில் 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.
9:06 AM IST
இன்று ரஜினிக்கு வில்லன்.. அன்று ஒரு வேலை சாப்பாட்டுக்கு திணறிய நடிகர்.. 100 கோடிக்கும் மேல் சொத்து..
இந்தியாவின் பிரபலமான இந்த நடிகர் வாட்ச்மேனாக வேலை பார்த்துள்ளார். சினிமாவில் தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
8:32 AM IST
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நான்கில் 1 குழந்தை பார்வைக் குறைபாட்டால் பாதிப்பு.. எய்ம்ஸ் ஆய்வு முடிவில் தகவல்..
ஸ்மார்ட்போன் அடிமையாதலால் நான்கில் ஒரு குழந்தை பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது என்று எய்ம்ஸ் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
8:11 AM IST
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு.. லிமிட்டை மீறி செலவு பண்ண முடியுமா? இதை நோட் பண்ணுங்க..
கிரெடிட் கார்டு லிமிட்டை விட அதிகமாக நீங்கள் செலவிடலாம். இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
7:40 AM IST
கொலையை இங்கு செஞ்சிட்டு! வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது! குற்றவாளிகளுக்கு சரியான ஆப்பு வைத்த நீதிபதி!
கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
7:39 AM IST
சென்னை வாகன ஓட்டிகளே தப்பி தவறி கூட 2 நாட்களுக்கு இந்த பக்கம் போயிடாதீங்க.. அப்புறம் கஷ்டம் தான்.!
சென்னையில் மெட்ரோ பணி காரணமாக இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
7:39 AM IST
மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த ஓபிஎஸ்
மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அதிமுக உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
10:28 PM IST:
விரைவில் மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
அருண் கோயல், 1985-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2022ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற ஒரு நாள் கழித்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்றவரை உடனடியாக தேர்தல் ஆணையராக நியமிக்க அப்படி என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியது.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா! மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீர் முடிவு!
3:27 PM IST:
வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.
1:18 PM IST:
2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
12:53 PM IST:
எக்விடாஸ் தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்குபவர் இறந்த சூழலில், நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கட்ட வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
12:30 PM IST:
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
12:07 PM IST:
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் உடனடியாக வீடு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
12:06 PM IST:
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் கட்டணம் மார்ச் மாதத்தில் அல்ல, ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
11:59 AM IST:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:36 AM IST:
படைப்பிரிவுகளுக்கான பயிற்சி நடந்து வருகிறது. இது ஆறு மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமம் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ போன்ற தனியார் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பினாகா முக்கியமான இலக்குகளுக்கு எதிராக விரைவாக ஃபயர்பவரை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
10:14 AM IST:
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அதிகாலை 5 மணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, யானையுடன் ஜீப் சஃபாரியில் மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:06 AM IST:
சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
9:08 AM IST:
FedEx கூரியர் மோசடி தொடர்பாக இரண்டே மாதங்களில் 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.
9:06 AM IST:
இந்தியாவின் பிரபலமான இந்த நடிகர் வாட்ச்மேனாக வேலை பார்த்துள்ளார். சினிமாவில் தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
8:32 AM IST:
ஸ்மார்ட்போன் அடிமையாதலால் நான்கில் ஒரு குழந்தை பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது என்று எய்ம்ஸ் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
8:11 AM IST:
கிரெடிட் கார்டு லிமிட்டை விட அதிகமாக நீங்கள் செலவிடலாம். இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
7:40 AM IST:
கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
7:39 AM IST: