MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

விசிக துணை பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. யார் இந்த ஆதவ் அர்ஜுனா?

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Mar 09 2024, 11:25 AM IST| Updated : Mar 09 2024, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aadhav Arjuna

Aadhav Arjuna

சமீபகாலத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் ஜனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனாவின்  வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனம் தான். கடந்த ஓராண்டில் விசிகவில் நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும் இவரே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். 

24
viduthalai chiruthaigal katchi

viduthalai chiruthaigal katchi

வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் ஆதவ் அர்ஜுனாவை மேடையேற்றி அவருக்கு பாராட்டுகளைத் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில வாரங்களில் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அவரை விசிக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட வைக்கவும் தலைமை திட்டமிட்டதாக தகவல் வெளியானது. திமுகவிடம் விசிக 2 தனித்தொகுதிகளும், ஒரு பொதுத்தொகுதியை கேட்டிருந்தது. ஆனால்,  திமுக கூட்டணியில் இரண்டு தனித் தொகுதி மட்டுமே விசிகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதையும் படிங்க: விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜுனா.. இவர் யாருடைய மருமகன் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயீடுவிங்க.!

34
Enforcement Directorate

Enforcement Directorate

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னையை தவிர்த்து கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

44
Lottery Martin

Lottery Martin

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டினின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அவரது மருகனும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூகாவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பித்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமலாக்க இயக்குனரகம்
தொல். திருமாவளவன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved