HBD Rohit Sharma: ஆதரவற்ற குழந்தைகளுடன் ரோகித் சர்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்!

ரோகித் சர்மாவின் 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Rohit Sharma's 37th birthday, his fans celebrated his birthday with underprivileged children, watch video rsk

இந்திய கிரிக்கெட் அணியில் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா இன்று தனது 37ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வாழ்த்து செய்தி அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர். அதோடு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவின் 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரோகித் சர்மாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.214 கோடி. பிசிசிஐ மூலமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வரையிலும், டெஸ்ட் ரூ.15 லட்சம், ஒருநாள் கிரிக்கெட் ரூ.6 லட்சம், டி20 கிரிக்கெட் ரூ.3 லட்சம் வீதமாக சம்பளம் பெறுகிறார். இதுதவிர மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரோகித் சர்மா ஒப்பந்தமாக ரூ.16 கோடி வீதம் சம்பளம் பெறுகிறார்

அதோடு பிராண்டுகளின் ஒப்பந்தம் மூலமாக வருத்திற்கு ரூ.5 கோடி, வீட்டின் சொத்து மதிப்பு ரூ.30 கோடி, கடைசியாக வாங்கிய லம்போர்கினி உருஸ் காரின் மதிப்பு ரூ.3.15 கோடி என்று மொத்தமாக இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.214 கோடி ஆகும்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios