வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் தலைமறைவாகினர். 

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், “மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,

Scroll to load tweet…

போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.

கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்!" என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?