Asianet News TamilAsianet News Tamil

Jaffer Sadiq: 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல்; ஜாபர் சாதிக் சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்கள்!!

Jaffer Sadiq: 2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

2000 crore drug smuggling case: How did dmkjaffer sadiq get caught-rag
Author
First Published Mar 9, 2024, 1:17 PM IST

Jaffer Sadiq: கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டுக் குழு மூன்று நபர்களை கைது செய்தனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்ட 50 கிலோ போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனத்தை கலப்பு உணவுத் தூள் மற்றும் உலர்ந்த தேங்காயில் மறைத்து கடத்தி இருந்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.

கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்பூரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு திட்டம்; டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சென்னை அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios