Asianet News TamilAsianet News Tamil

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை! சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது  அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

enforcement directorate raids more than 10 locations in Chennai tvk
Author
First Published Mar 9, 2024, 9:45 AM IST

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீடு, விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடுகளில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மணல் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள்,   அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், ரசாயன நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க: தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்தமா? ஓபிஎஸ் நள்ளிரவு வரை ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை..!

enforcement directorate raids more than 10 locations in Chennai tvk

இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஆர்.ஏ.புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வரும்  செல்வராஜ் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றிலும்,   மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரிலும், பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க:  விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜுனா.. இவர் யாருடைய மருமகன் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயீடுவிங்க.!

enforcement directorate raids more than 10 locations in Chennai tvk

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விசிக துணைப் பொதுச்செயலாளரும், லாட்டரி அதிபர் மாரட்டினின் மருகனுமான ஆதவ் அர்ஜுனா இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அடுத்தடுத்து தமிழகத்தில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios