தேசிய மலராக உள்ள தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
Tamil News Live Updates: புதிய தமிழக கட்சியுடன் அதிமுக கூட்டணி உறுதியானது.!

அதிமுக கூட்டணி பேசுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசுவார்த்தை நடத்தியதை அடுத்து கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்த ஆலோசனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பாஜகவுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் வழக்கு: தீர்ப்பு தள்ளி வைப்பு!
தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார்
பூட்டுக்கு மேல் பூட்டு; நோட்டீஸ் கிழிப்பு: ஜாபர் சாதிக் தாயார் சம்பவம்!
ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து அவரது தாயார் புதிய பூட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்
திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர்: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!
திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது
இந்தியா ஒரு நாடு அல்ல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி ஆ.ராசா.. குவியும் கண்டனங்கள்!
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை!
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
சிம்புவை கழட்டிவிட்டு... ராட்சச நடிகருடன் ஆரம்பமாகும் கொரோனா குமார் - ஷூட்டிங் அப்டேட் இதோ
கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார்.
Lok Sabha election 2024 மக்களவைத் தேர்தல் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
மக்களவைத் தேர்தல் 2024 தேதி தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவில் முதல் முறையாக.. நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்.. மார்ச் 6ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை மார்ச் 6, 2024 அன்று தொடங்கப்படும். இந்த மைல்கல் திட்டம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதன் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.
முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்துக்கு முக்கிய பதவி.! அப்படினா திமுகவின் நெல்லை வேட்பாளர் இவரு இல்லையா?
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
என்னது Bride of Tamil Nadu வா?: வைரலாகும் திமுக போஸ்டர்!
PRIDE OF TAMILNADU என்பதற்கு பதிலாக BRIDE OF TAMILNADU என முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு திமுகவினர் அச்சடித்துள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது
100 கோடி வசூல்... தமிழ்நாட்டில் ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ்..!
உலகளவில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடுத்ததாக ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கின!
மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
சிறு வயதில் பேச முடியாது.. முதுகுத்தண்டு பிரச்சனை.. ஆனாலும் ரூ.3000 கோடி சொத்துக்கு அதிபதியான சூப்பர்ஸ்டார்..
பள்ளியில் துன்புறுத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான, பேச முடியாத, முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு தற்போது 3000 கோடி ரூபாய் ஆகும்.
தேர்தலில் போட்டியிட எம்பி சீட் தாரோம்... ஆஃபர் கொடுத்த அரசியல் கட்சிக்கு திவ்யா சத்யராஜ் கொடுத்த மாஸ் ரிப்ளை
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, தேர்தலில் போட்டியிட தனக்கு ஒரு அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை தான் என கூறி இருக்கிறார்.
தாறுமாறான அம்சங்களுடன் களமிறங்கும் ஆசஸ்.. அதிர வைக்கும் Specs-களுடன் வரும் ROG Zephyrus G16..!
ஆசஸ் இந்த ஆண்டின் ROG Zephyrus G16 ஐ மிகவும் விரும்பத்தக்க கேமிங் ரிக் ஆக மாற்றுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விசிகவில் இருந்து நீக்கம்!
போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய தமிழக கட்சியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணி பேசுவார்த்தை குழுவினர், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசுவார்த்தை நடத்த உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் பெண் பாலியல் வழக்கு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்கண்ட் போலீஸ்!
ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்கண்ட் போலீஸ் ரூ.10 லட்சம் வழங்கினர்