ஸ்பெயின் பெண் பாலியல் வழக்கு: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்கண்ட் போலீஸ்!

ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்கண்ட் போலீஸ் ரூ.10 லட்சம் வழங்கினர்

Spanish woman gangrape case Jharkhand Police Rs 10 lakh compensation to victim husband smp

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவருடன் சேர்ந்து உலகம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  தற்போது இந்தியா வந்துள்ள அந்த தம்பதியினர், கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் சென்றுள்ளனர். கடந்த 1ஆம் தேதி அம்மாநிலத்தின் தும்கா மாவட்டத்துக்கு சென்ற அவர்கள், சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

அப்போது, அவர்களது கூடாரத்துக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, கணவரை கொடூரமாக தாக்கியதுடன், அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சுமார் 7 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜார்க்கண்ட் டிஜிபி அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உறுதியளித்துள்ளார்.

சென்னையில் வைஜெயந்தி மாலா, ஹெச்.வி. ஹண்டேவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்த நிலையில், ஸ்பெயின் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு இழப்பீடாக ஜார்கண்ட் போலீஸ் ரூ.10 லட்சம் வழங்கினர். ஜார்கண்ட் மாநிலம், தும்காவில் உள்ள காவல் துணை ஆணையர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios