Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் அறிவிப்பு..இரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இனி கவலையில்லை..புது சேவையை தொடங்கிய இரயில்வே..

இனி ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Blankets and rugs will be provided on trains
Author
India, First Published Mar 10, 2022, 7:52 PM IST

இனி ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடே ஸ்தம்பித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, பொது இடங்களில் அனுமதி மறுப்பு, சுற்றுலா தளங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்தன. 

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு பரிசு..யாரெல்லாம் பெறலாம்..? தமிழக அரசு ஆணை வெளியீடு..

இது போன்று ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ரயில் பயணிகளின் வருகை குறையத் தொடங்கியது. தொற்று அச்சத்தால் பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதை தவிர்த்தனர். இந்த நிலையில் ரயில்வேத் துறை வருவாயில் இதுவரை இல்லாத அளவில் பெரும் இழப்பை சந்தித்தது. பின்னர் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில்,படிப்படியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்பட தொடங்கியது. 

மேலும் படிக்க: Todays Gold Rate: பெண்களுக்கு ஹாப்பி நியூஸ்... சரிந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.880 குறைந்து விற்பனை!!

தொடக்கத்தில் குறிப்பிட்ட வழிதட ரயில்கள் மட்டும் இயங்க தொடங்கியது. பின்னர் விரைவு மற்றும் சிறப்பு ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்பதிவில்லா பெட்டிகளையும் இயக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதனை தொடர்ந்து இனி ரயில்களில் குளிர்சாதன வகுப்பில் பயணிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி, திரைச்சீலைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இச்சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது என்று ரயில்வே நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.
 

மேலும் படிக்க: Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமா? பள்ளிக்கல்வித்துறை கூறுவது என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios